ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 27 மே, 2013

ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் சார்பில் வெண்குடை திருவிழா


ராஜபாளையத்தில் 7 தெரு மக்கள் நடத்திய சித்திரை வெண்குடை திருவிழா


ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் சார்பில் வெண்குடை திருவிழா நடைபெற்றது. ராஜபாளையம் நகர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 தெருக்களுக்கு பாத்தியப்பட்ட சித்திரை வெண்குடை திருவிழா சீனிவாசன் புதுத்தெரு சாவடி தலைமையில் ஆணையூர் தெரு மற்றும் அம்மன் பொட்டல் மத்திய வடக்கு தெரு இணைந்து நடத்தினர்.

நேற்று காலை சுமார் 7.30 மணி அளவில் சீனிவாசன் புதுத்தெரு சாவடியில் இருந்து நீர்காத்த அய்யனார்சாமி சப்பரத்தில் எழுந்தருளி தாரை தப்பட்டையுடன் பட்டத்து யானை, ஆலி ஆட்டம், குதிரை ஆட்டம், மயிலாட்டம், செண்டா மேளம், பேண்ட் வாத்தியம் முழங்க குடைகள் சகிதம் புறப்பட்டு வெண்குடை ஏந்தி செம்புலி சித்தன் அதிவீரராஜ் ஆடி வர 7 தெருக்கள் உலாவி பெரிய கடை பஜார் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு முடங்கியார் சாலை வழியாக அம்பேத்கார் நகர் சென்றடைந்தது.

அங்கு இருந்து மேற்கே அய்யனார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மாலை சுமார் 5 மணிக்கு அம்பேத்கார் நகர் வந்து பின்பு அங்கு இருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம் வந்து அங்குள்ள வாழவந்தம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து மீண்டும் பெரிய கடை பஜார் சாவடி வந்தடைந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை சீனிவாசன் புது தெரு சாவடியில் இருந்து வெண்குடை ஊர்வலம் புறப்பட்டு 7 தெருக்கள் வழியாக வலம் வந்து தென்காசி ரோடு வழியாக அம்பலப்புளி பஜார் விஸ்வ கர்ம சாவடிக்கு சென்று ஆசி பெற்று மீண்டும் சீனிவாசன் புதுத்தெரு சாவடி வந்தடையும்.

இரவு சுமார் 10 மணி அளவில் பாம்பே லாட்ஜ் எதிர்புறம் அமைந்துள்ள மேடையில் ஆடல்பாடல் நிகழ்ச்சியும், நாளை இரவு வடிவேல் கணேஷ் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்திரை வெண்குடை திருவிழா கமிட்டியாளர்கள் செய்திருந்தன

ஞாயிறு, 26 மே, 2013

தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை

தேவேந்திரர் திருவிழா எனும் சமூக எழுச்சி மாநாட்டிற்கு அழைக்கிறோம்.


தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும் வளரும் பொறியாளர் நல சங்கம் இணைந்து நடத்தும் தேவேந்திரர் திருவிழா எனும் சமூக எழுச்சி மாநாட்டிற்கு அனைத்து சொந்தங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
மதுரையை சேர்ந்த நம் சொந்தங்கள் அனைத்து நம் சொந்தங்களுக்கு இந்த செய்தியை பரப்புமாறு கேட்டு கொள்கிறோம்.

நாள்:
26-05௨013, வரும் ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 8.00 மணி முதல்.
இடம்:
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, தேனிரோடு, மதுரை.
தொடர்புக்கு: திரு. தங்கராஜ் (94434 05918)

புதன், 1 மே, 2013

கருணாநிதிக்கு கேள்வி


புகைப்படம்

சோழ சேர பாண்டிய மரபை சேர்ந்த மள்ளர்களின் வரலாறு




இந்த வரலாற்று உண்மையை புரிந்து கொண்டு  தமிழ் சமூகம் ஒன்று சேருமா ??????...... தமிழர் நாட்டில் தமிழரின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துமா ?????? இல்லை இல்லை ..... தமிழனாக தலைநிமிர்ந்து நடக்க எனக்கு விருப்பம் இல்லை ....வந்தேறிகளுக்கு அடிமையாய் இருப்பதே எனக்கு பெருமை என்று நிரந்தர அடிமையாய் மாறுமா ?????
இந்த வரலாற்று உண்மையை புரிந்து கொண்டு தமிழ் சமூகம் ஒன்று சேருமா ??????...... தமிழர் நாட்டில் தமிழரின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துமா ?????? இல்லை இல்லை ..... தமிழனாக தலைநிமிர்ந்து நடக்க எனக்கு விருப்பம் இல்லை ....வந்தேறிகளுக்கு அடிமையாய் இருப்பதே எனக்கு பெருமை என்று நிரந்தர அடிமையாய் மாறுமா ?????

பள்ளர்குடியே பாண்டியர்குடி


பள்ளர்குடியே பாண்டியர்குடி என்று தக்க சான்றுகளோடு நிருபித்துவிட்டோம் ..... இதனை இல்லை ...பொய் வரலாறு .... கற்பனை கதை ...... என்று எழுதிவரும் சில அறிவிலிகளுக்கு இப்புகைப்படம் சமர்ப்பணம்
பள்ளர்குடியே பாண்டியர்குடி என்று தக்க சான்றுகளோடு நிருபித்துவிட்டோம் ..... இதனை இல்லை ...பொய் வரலாறு .... கற்பனை கதை ...... என்று எழுதிவரும் சில அறிவிலிகளுக்கு இப்புகைப்படம் சமர்ப்பணம்......

இராஜபாளையம் சித்திரை வெண்குடைதேவேந்திரர் திருவிழா


 சித்திரை மாதம் என்றாலே பாண்டியப் பள்ளர்களின் பல்வேறு வரலாற்று திருவிழாக்களை நாம் காணமுடியும்

16-17 ம் நூற்றாண்றுகளில் வடுக நாயக்கர்கள் பாண்டியப் பள்ளர்களின் தலைநகரமான மதுரையை கைப்பற்ற பல்வேறு போர்முயற்சிகளை மேற்கொன்டனர் அவைகள் பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தன.

பாண்டியப் பள்ளர்களை தனியாக வெல்ல முடியாது என்றும் பாளையங்களில் களவு திருட்டு ஆகியவற்றை குலதொழிலாக கொண்ட மக்களை சூழ்ச்சிக்காக வடுகு நாயக்கர்கள் சேர்ந்துக்கொண்டனர்.

பல்வேறு போர் சூழ்ச்சி முறைகளால் பாண்டியப் பள்ளர்கள் போரால் பின் தங்கி பல பிரிவுகளாக பிரிந்து பாண்டியர்கள் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மற்றும் தெற்கே திருநேல்வேலி இராஜபாளையம் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் குடியேறினார்கள்
இவற்றில் பல்வேறு பகுதிகளை வடுகு நாயக்கர்கள் கைப்பற்றினாலும் தெற்கே செங்கோட்டை இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாண்டியப் பள்ளர்களை கைப்பற்றமுடியவில்லை வடுகு நாயக்கரின் பல போர் சூழ்ச்சிமுறைகள் தோல்வியில் தான் முடிந்தன.

இராஜபாளையம் வாழ் பாண்டியப் பள்ளர்கள் தங்களது வெற்றியை நிலைநாட்டும் விதமாக சித்திரை முதல் தேதியில் சித்திரை வெண்குடை திருவிழா நடத்தி வருகின்றனர் இத்திருவிழா சுமார் 325 ஆண்டுகள் நடைபெற்று வருகின்றன தற்போது 326 வருடம் நடைபெற உள்ளது..
இவை சுமார் 4 நூற்றான்டுகள் ஆகும்
இந்த திருவிழாவையும் நாயக்கர்கள் மதுரையை கைப்பற்றிய காலத்தையும் கணக்கிடும் போது 100% பாண்டியர்கள் பள்ளர்கள் என நிருபிக்கப்படுகிறது.

நாயக்கர்கள் மதுரையை கைப்பற்றிய காலம் 16 நூற்றாண்டு அதில் இருந்து 325 & 326 ஆண்டுகள் திருவிழா நடைபெறுகிறது சுமார் 4 நூற்றாண்டுகள் ஆகும்

16+4=20 ஆகும் தற்போது 20-21 ம் நூற்றாண்டு நடக்கிறது

திருவிழா முறை:-

இத்திருவிழாவில் பாண்டியப் பள்ளர்கள் வேந்தர்களின் போர் வெற்றி மரபு முறையான. வேந்தர் என்ற முறையில் பள்ளர் குல இளைஞர் ஒருவருக்கு வேந்தர் வேடம் அனிந்து காலில் கால் வளையம் வெற்றி வாகை என்னும் வெண்குடை ஏந்தி யானைப்படைகளுடன் இராஜபாளையத்தில் தேவேந்திர குலத்தினர் வாழும் 7 தெருகள் மற்றும் பாளைப்பகுதிகளை சுற்றி ஊர் திரும்புவது வழக்கம்
இங்கு பாளையம் என்பது இராஜக்கள் போர் படைகளை நிறுத்தும் இடம் ஆகும்

கொள்ளர் இன மரபு முறை:-

இங்கு பாண்டியப் பள்ளர்கள் வெற்றி வாகை சூடி ஊர் திரும்பும் போது கொள்ளர் என்னும் ஆசாரி இனத்தை சார்ந்தவர்கள் போரில் வென்று வரும் பாண்டியப் பள்ளர்களை தங்களின் குல தெய்வமான அய்யனார் கோயிலில் பாண்டிய பள்ளர்களை மேளதாளங்களுடன் வரவேற்று மரியாதை செய்து வருவதாகவும் இவை 325 வருடங்கள் நடைபெறுவதாகவும் கொள்ளர் இன மக்களும் அவர்களின் ஆவனங்களும் சொல்லுகிறது.

முருகன் ஆசாரி இராஜபாளையம்:-

இவர் கொள்ளர் இனத்தை சார்ந்தவர் இவர் சொல்லுவது பாண்டியப் பள்ளர்கள் ஏரும் போரும் தங்களின் குல தொழிலாக கொண்டு வாழும் மக்கள். அவர்களின் உழவு தொழிலுக்கு ஏர் கலப்பை போன்ற ஆயுதங்களையும்
போர் முறைக்கு ஈட்டி வாள் பாதுகாப்புகவசம் போன்ற போர் ஆயுதங்களை கொள்ளர் சமுதாய மக்கள் தான் செய்து கொடுத்து வந்துள்ளனர்

பாண்டியர்கள் வெற்றி பெறுவதற்கு போர் கருவிகள் அவசியம் என்பதால் போர் வெற்றியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதாலும் தங்களது ஆயுங்களுடன் போரில் வென்று வரும் பாண்டியப் பள்ளர்களை வரவேற்று முதல் மரியாதை செய்வதாக தெரிவிக்கிறார்

போர் மரபு முறை:-

போர் மரபு முறை என்பது போர்களத்தில் போர்வீரர்களும் ஆண்களும் இளைஞர்களும் மட்டுமே செல்லுவது மரபு முறை ஆகும்
பென்களுக்கும் முதியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம்.

அதைப்போல் வெண்குடை திருவிழாவில் பாண்டியர் வம்சம் என்ற முறையில் பள்ளர் குல இளைஞர்கள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும்
பென்கள் பங்கு கொள்ள கூடாது என்பது மரபு முறை ஆகும்

பாண்டியர் வம்சம் இல்லாத பிற சமுதாயத்தினர் பங்கு கொள்ள கூடாது என்பது குறிப்பிடதக்கது ஆகும்

இராஜபாளையம் சித்திரை வெண்குடை திருவிழாவை கணக்கிடும் போது பாண்டியர்கள் பள்ளர்கள் தான் என 100% நிருபிக்கப்படுகிறது