ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 20 அக்டோபர், 2011

மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் : மள்ளர் இலக்கிய கழகம்

தென்காசி : "மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும்' என மள்ளர் இலக்கிய கழக நிறுவன தலைவர் சுப.அண்ணாமலை கூறினார். மள்ளர் நாடு, மள்ளர் இலக்கிய கழக நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இலஞ்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மள்ளர் இலக்கிய கழக நிறுவன தலைவர் சுப.அண்ணாமலை தலைமை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் தண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மாநில நிறுவன தலைவர் சுப.அண்ணாமலை நிருபர்களிடம் கூறும் போது, ""தேவேந்திர குலத்தினருக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும். வீரன் சுந்தரலிங்கனார் பயன்படுத்திய வெடி மருந்து கிட்டங்கியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தி.மு.க.ஆட்சியில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. தற்போதுதான் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுப்போம். நடவடிக்கைக்காக 3 மாத காலம் காத்திருப்போம். அதன் பின்னர் கோரிக்கையை வலியுறுத்துவோம்'' என்றார் சுப.அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக