ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை...

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக